காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் தகுதியும் திறமையும் வாய்ந்த புதிய தலைமுறை உலமாக்களை வார்த்தெடுக்கும் மகத்தான முயற்சி !!!

ஜாமிஆ அல்-ஹுதா அரபிக்கல்லூரி

குராஸானி பீர்பள்ளிவாசல் & தர்கா வஃ க்ப்கமிட்டி
#54 L B சாலை அடையாறு
சென்னை. 600 020.
தொடர்புக்கு 2491 6421 / 4261 7000 / 78068 50850

சிறப்பம்சங்கள்

 • ஏழாண்டு பாடத் திட்டம்.
 • ஏழாமாண்டின் முடிவில் மார்க்ககல்வியின் மூலமாக மெளலவி ஆலிம் ஆகவும்,உலகக் கல்வியில் (B.Com ,B.B.A) ஆகவும் பொன்னான வாய்ப்பு.
 • சென்னைப் பல்கலையில் அஃப்ஜலுல்-உலமா பட்டயம்.
 • தமிழ் ,அரபி, ஆங்கிலம் பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி.
 • கம்ப்யூட்டர் சிறப்பு வகுப்புகள்.
 • பள்ளிப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருவழி கல்விமுறையும் உண்டு.
 • எட்டாம் வகுப்புதேறிய குர்ஆன் ஓதத்தெரிந்த மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை.
 • ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சேர்க்கை நடைபெறும்.

 

 • Seven years course (syllabus)
 • Golden opportunity to complete Aalim course through religious studies and B.Com / BBA course through academic studies in the end of seven years.
 • Afzal-ul-Ulama Diploma from University of Madras.
 • Speaking and writing practice in Tamil, Arabic and English.
 • Special classes for computers.
 • Tamil and English Mediums are available for Academic Studies.
 • The Admission processes begin in the month of May every year.
 • Qualification for Admission is get the pass mark in 8th standard and should read the Quran.

ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி

சென்னை ,கிழக்கு கடற்கரை சாலையில் 50 மாணவர்கள் எட்டு பேராசிரியர்களுடன் நடைபெற்று வந்த ஒரு ஆங்கிலோ அரபிக் கல்லூரியின் நிர்வாகத் தலைமை ஷரீஆவின் சட்டங்களுக்கு மாற்றமாக பேசவும் எழுதவும் துவங்கியபோது மார்க்க அறிஞர்களால் திருத்திக் கொடுக்கப்பட்டும் திருந்தாதபோது அங்கிருந்துவெளியேறுதல் என்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டது. தங்களை நம்பி கல்வி கற்கவந்த மாணவர்களுக்கு சரியான கல்வியைத் தரவேண்டிய பொறுப்பு அவர்களின் ஆசிரியர்களையே சாரும் என்பதால் இந்த மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஓர் புகலிடம் தேவைப்பட்டது. அடையாறு அடைக்கலம் தந்தது.

அடையாறு குராசானி பீர் பள்ளிவாசலில் ஓர் அரபிக் கல்லூரியைத் துவங்கி நடத்த வேண்டும் என்ற அதன் நிர்வாகிகளின் கனவுக்கு ஏற்றவாறு காலம் கனிந்தது. சூழ்நிலைகள் உருவானது.
2014 ஆம் ஆண்டு புனித ரமலானில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வழியாக ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி துவங்குவதை விளம்பரம்படுத்தப்பட்டது. 2014 ல் சுமார் 60 மாணவர்கள் சேர்ந்தனர்.

இன்று (2016) 100 மாணவர்களைத் தாண்டி வளர்ச்சிப் பாதையில் கல்லூரி தன் முன்னேற்ற பயணத்தை துவங்கியுள்ளது.
மஸ்ஜிதுன் நபவியுடன் ஸூஃப்பா (திண்ணை மத்ரஸா) நடைபெற்றது போல்…… .இங்கு அடையார் ஜாமிஆ மஸ்ஜிதும் ஜாமிஆ அல்ஹுதாவும் இயங்குகிறது.

தமிழகத்தின் முக்கிய உலமா பெருமக்களெல்லாம் கல்லூரிக்கு வந்து வாழ்த்தி துஆ செய்துள்ளனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அடையார் குராசானி பீர் பள்ளிவாசலின் சங்கைக்குரிய நிர்வாகிகள், மஹல்லாவாசிகள், அனைவருக்கும் நிறைந்த நற்கூலிகளை வழங்குவானாக

ஆமீன்யாரப்பல்ஆலமீன்……

கல்லூரிப் பேராசிரியர்கள்

மெளலானா மெளலவி M.சதீதுத்தீன் பாஜில் பாகவி ஹழ்ரத் , M.A.,M.Phil.,P.hd (முதல்வர்)

மெளலானா மெளலவி A.ஜஃபர் அலி மக்தூமி ஹழ்ரத் B.A.,(து.முதல்வர்)

மெளலானா மெளலவி S.அபுல்காசிம் மஸ்லஹி ஹழ்ரத் B.A.

மெளலானா மெளலவி S.M.A.அலாவுத்தீன் பாஜில் பாகவி ஹழ்ரத் M.A.,M.Phil.

மெளலானா மெளலவி M.B. முஹம்மது ஜக்கரிய்யா ஹஸனி ஹழ்ரத் M.A.

மெளலானா மெளலவி M.ஃபாழில் நாபிஃயீ ஹழ்ரத் B.Com

மெளலானா மெளலவி S.முஹம்மது காசிம் சிராஜி ஹழ்ரத் M.A.

ஜனாப் S.காதர்கனி B.sc.,B.Ed.

மெளலானா மெளலவி A.அன்சர் பாதுஷா மஹ்தி M.Com

ஜனாப் U.அசாருதீன் M.A.,D.T.Ed.

மெளலானா மெளலவி M.முஹம்மது அக்பர் அல்மஹ்தி B.Com

எங்களின்மகிழ்ச்சிதிருநாள்

 

அல்ஹாஜ் K.ஹுஸைன் வஹாப்
தலைவர், குராஸானிபீர்பள்ளிவாசல் & தர்காவஃக்ப்கமிட்டி
ஜாமிஆ அல்-ஹுதா அரபிக்கல்லூரி

அல்ஹம்துலில்லாஹ் அடையார் குராஸானி பீர் பள்ளிவாசல் & தர்கா வஃக்ப் கமிட்டி நடத்தும் அல்-ஹுதா அரபிக் கல்லூரியின் வருகிற 28-05-2016 அன்று 13-மாணவர்கள் மார்க்க கல்வியையும் உலககல்வியையும் பெற்று நிறைவடைந்த மாணவர்களுக்கு முதலில் என்னுடைய உளமாற துஆவுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் குராஸானி பீர், குல் முஹம்மது நக்ஷபந்தி குராஸானிலிருந்து கொழும்பு வழியாக சென்னை மண்ணடியில் கால்பதித்தார். ஹள்ரத்(ரஹ்) அவர்கள் அவருடைய நோக்கங்கள் தஃவா பணிக்காக தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் ஹள்ரத் அவர்கள் கோவளம் தமீம் அன்ஸாரி (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு ஜியாரத் செய்வதற்காக நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது இடைபட்ட நேரத்தில் ஓய்வெடுக்க ஏதேனும் ஒரு இடத்தில் ஓய்வு எடுப்பார்கள்.அந்த பகுதிதான் நமது பள்ளிவாசல் இடமாகும்.நமது ஹள்ரத் அவர்கள் மனதில் அடையார் பகுதியில் ஒரு பள்ளிவாசல் மதரஸா & கபருஸ்தான் ஏற்படுத்த வேண்டி அவர்கள் சொந்த பணத்தில் நமது பள்ளிவாசல் இடத்தை வாங்கி ஜனாபா இஸ்ஜத் பீவி மூலமாக 1906 ல் வஃக்ப் செய்யப்பட்டது.

ஹள்ரத் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் 20-08-2014 அன்று நமது பள்ளிவாசல் வளாகத்தில் அல்ஹுதா அரபிக் கல்லூரி துவக்கப்பட்டது. எங்களுடைய நிறுவாகக் கமிட்டியின் காலத்தில் துவக்கியதை எண்ணிப்பார்க்கும் போது பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். காரணம் நபி(ஸல்) அவர்கள் “கல்விகற்க வேண்டியது அனைவர் மீதும் கடமையாகும்” என்று கூறியுள்ளார்கள். நமக்கு குர்ஆன் உடைய தமிழ் மொழிப் பெயர்ப்பு கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஹள்ரத் அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்கள் முதன்முதலில் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு செய்ததின் காரணத்தால் கடந்த தலைமுறையினருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் குர்ஆனுடைய அர்த்தங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போல் நமது அரபிக்கல்லூரியில் ஏழாண்டுகள் மார்க்ககல்வியும் அதோடு பட்டப்படிப்பும் சேர்ந்து மாணவர்கள் ஆலிம் பட்டத்தோடும், டிகிரியும் பெறுகிறார்கள். நமது பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி மாணவர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக ஏற்படுத்தியுள்ளோம். நமது மதரஸாவுடைய தலைமை ஆசிரியர் (முதல்வர்) மற்றும் உஸ்தாதுமார்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மிகச்சிறப்பாக இரண்டு ஆண்டுகள் தரமானகல்விகளை போதித்து தரமான மாணவர்களை உருவாக்கி ,13 மாணவர்கள் பட்டம் பெறுவது , அடையார் பகுதிவாழ் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான திருநாளாகும். மதரஸாவுக்காக உதவி செய்தவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் மற்றும் வழங்க போகிறவர்களுக்கும், துஆ செய்யக்கூடியவர்களுக்கும் இதற்காக பாடுபடக்கூடிய அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் நிறைவான நற்கூலிகள் அல்லாஹ் வழங்குவான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆகையால் நாமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவரை ஆலிம்ஆக்க முயற்சிக்க வேண்டும் “யா அல்லாஹ் எங்களை முஸ்லிமாக படைத்ததற்க்கும், நாயகம் அவர்களின் உம்மத்தாக ஆக்கியதற்க்கும், சுன்னதவல்-ஜமாஅத் கொள்கையில் நடப்பதற்கும் கிருபை செய்த கிருபையாளனே, கருணையாளனே உனக்கு எத்தனை ஆண்டுகள் நன்றிகள் கூறினாலும் போதாது. என்னை பள்ளிவாசலில் பணியாற்றவைத்த அதில் மதரஸாவையும் ஆரம்பித்து வைக்க கிருபைசெய்த உனக்கு என்றென்றும் நான் அடிமை…

மெய்க்கும் ஆன்றோர் கனவு

S. முஹம்மது காமில் B.COM
செயலாளர்; குராஸானி பீர்பள்ளிவாசல்&,தர்காவக்ஃப்கமிட்டி,
ஜாமிஆ அல்ஹூதா அரபிக்கல்லூரி.

‘கனவு காணுங்கள் நிச்சயம் இலக்கை எட்டுவீர்கள்.’ மறைந்த மாமேதை இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் வாக்கு. நமது குராஸானி பீர் பள்ளிவாசல் பற்றிய நமது முன்னோர்கள் கண்ட கனவின் சிறிய தொகுப்பு.

குல் முஹம்மது குராஸானி பீர் நக்ஷபந்த் அவுலியா அவர்கள் இவ்விடத்தில் சுமார் 100 பேர் கொண்ட தொழக்கூடிய சிறிய பள்ளிவாசல்கட்டி தொழுது வந்தவர்கள் வருங்காலத்தில் இந்த இடத்தில் மார்க்ககல்விக்கான மதரஸா அமைய வேண்டும் என்ற கனவோடு 1906-ம் ஆண்டு வஃக்ப் செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் இந்த மஹானின் கனவு 110 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது.

1988-ம் ஆண்டு இப்பள்ளிவாசலில் சிராஜுல்மில்லத் அல்ஹாஜ் A.K.A. அப்துஸ் ஸமதுசாஹிப் அவர்களின் முன்னிலையில் புதியகமிட்டி அமைத்து நான்தலைவராகவும் ஜனாப். கோடைஇடி இப்ராஹிம் அவர்கள் செயலாளராகவும் இணைந்து இப்பெரிய பள்ளிவாசலின் கட்டிடபணி துவங்கப் பெற்றது. ஒருநாள் சிராஜில்மில்லத் அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்,’ இங்கு பள்ளிகட்டுவது மட்டும் உங்கள் பணிஅல்ல. இவ்விடத்தில் பெரிய மதரஸா ஒன்றை உருவாக்கி மற்ற மதரஸாக்களில் பட்டம்பெற்ற ஆலிம்களுக்கு மேற்படிப்பு பயிலும் யூனிவர்சிட்டி (பல்கலைகழகம்) அமைத்து தமிழகத்தில் தலைசிறந்த உலமாக்களை கொண்டு கல்வி கற்பிக்க வேண்டும்’ என்ற அவர்களின் கனவை கூறினார்கள். அல்லாஹ்வின் அருளால் 28 ஆண்டுகளுக்கு பின் அவர்களது கனவு நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.

ஆன்றோரின் கனவை என்ஹயாத் உள்ள போதே நிறைவேற வேண்டுமே என்ற என்கனவும் , துவாவும் நிறைவேறும் நாளும் வந்தது. ”ஜாமிஆ அல்ஹீதா” மதரஸா அமையும் வாய்ப்பும் நம்மை தேடிவந்த போதுபல எதிர்ப்புகளை மீறி அல்லாஹ் இங்கு அமைத்து தந்தான். எங்கள் அனைவரின் கனவுகளையும் நிறைவேற்றி தந்த இறைவனுக்கு எல்லா புகழும்.

கனவு கானுங்கள் உங்களைபற்றி, உங்கள் எதிர்காலம் பற்றி ,உங்கள் குடும்பம்பற்றி, எங்கள் சந்ததியர்பற்றி. நல்ல எண்ணங்களை நல்லகனவுகளை எல்லாவல்ல ரஹ்மான் கபூல் செய்வான் நிறைவேற்றித் தருவான்.
ஆமின்!

2016-ஆம் ஆண்டு ஸனது பெற்ற மாணவர்கள்

 

மெளலவி – ஆலிம் அஃப்ஜலுல் உலமா, M.முஹம்மது அக்பர் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ J.முஹம்மது மொய்தீன், அமைந்தகரை சென்னை-600 029.

மெளலவி- ஆலிம் அஃப்ஜலுல் உலமா Q.ஜூபைர் அலி அல்மஹ்தி B.Com, DCA
த/பெ M.A கமருத்தீன், கீழ்வாளை, விழுப்புரம்

மெளலவி- ஆலிம், A.தய்யான் அஹ்மது அல்மஹ்தி B.Com, DCA
த/பெ S.அமீன் , ஆம்பூர்,வேலூர்-635 802.மெளலவி- ஆலிம், A.முஹம்மது அரபாத் அல்மஹ்தி B.Com,DCA
த/பெ S.M அஷ்ரப் அலி, சின்மையா நகர்,சென்னை-600 111.

மெளலவி- ஆலிம் அஃப்ஜலுல் உலமா K.சதாம் ஹுசைன் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ E.கரீம், அச்சரப்பாக்கம்,காஞ்சிபுரம்-603 301.

மெளலவி- ஆலிம், J.சல்மான் அப்ரோஸ் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ J.ஜாகிர் ஹுஸைன், ஐயங்கார் குளம், காஞ்சிபுரம்-600 536

மெளலவி- ஆலிம் அஃப்ஜலுல் உலமா I.முஹம்மது ஷபீர் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ K.A இஸ்மாயீல், வண்ணாரப்பேட்டை,சென்னை-600 021.

மெளலவி- ஆலிம்,அஃப்ஜலுல் உலமா J.முஹம்மது கஸ்ஸாலி அல்மஹ்தி B.Com, DCA
த/பெ K.M.ஜமால் மொய்தீன்,நேதாஜிநகர், தண்டையார்பேட்டை,சென்னை -1

மெளலவி- ஆலிம் அஃப்ஜலுல் உலமா R.சாதிக் பாஷா அல்மஹ்தி B.Com, DCA
த/பெ K.ராஜா முஹம்மது, ஒரங்கூர், கடலூர்-606 108.

மெளலவி- ஆலிம், S.சையது யாசின் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ B.சாதிக் பாஷா, அச்சரப்பாக்கம், காஞ்சிபுரம்-603 301.

மெளலவி- ஆலிம், K.உமர் கத்தாப் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ I.காஜா மைதீன், அமைந்தகரை, சென்னை-600 029.

மெளலவி- ஆலிம், S.சதாம் அன்வர் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ A.சாதிக் பாஷா, பாகூர்,பாண்டிச்சேரி-605 402.

மெளலவி- ஆலிம், H.ரஹ்மத்துல்லாஹ் அல்மஹ்தி B.Com, DCA
த/பெ M.A.ஹஸன் முஹம்மது, ஜலஹல்லி வில்லேஜ் , பெங்களூரு- 13