அடையாறு குராஸானி பீர் மஸ்ஜித்

 

கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மஹான் குராஸானி பீர், குல் முஹம்மது நக்ஷபந்தி குராஸானிலிருந்து கொழும்பு வழியாக சென்னை மண்ணடியில் கால்பதித்தார். ஹள்ரத்(ரஹ்) அவர்கள் அவருடைய நோக்கங்கள் தஃவா பணிக்காக தன்னுடைய பணிகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் ஹள்ரத் அவர்கள் கோவளம் தமீம் அன்ஸாரி (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு ஜியாரத் செய்வதற்காக நடைபயணம் மேற்கொள்ளும் பொழுது இடைபட்ட நேரத்தில் ஓய்வெடுக்க ஏதேனும் ஒரு இடத்தில் ஓய்வு எடுப்பார்கள்.அந்த பகுதிதான் நமது பள்ளிவாசல் இடமாகும்.நமது ஹள்ரத் அவர்கள் மனதில் அடையார் பகுதியில் ஒரு பள்ளிவாசல் மதரஸா & கபருஸ்தான் ஏற்படுத்த வேண்டி அவர்கள் சொந்த பணத்தில் நமது பள்ளிவாசல் இடத்தை வாங்கி ஜனாபா இஸ்ஜத் பீவி மூலமாக 1906 ல் வசூல் செய்யப்பட்டது.

குல் முஹம்மது குராஸானி பீர் நக்ஷபந்த் அவுலியா அவர்கள் இவ்விடத்தில் சுமார் 100 பேர் கொண்ட தொழக்கூடிய சிறிய பள்ளிவாசல்கட்டி தொழுது வந்தவர்கள் வருங்காலத்தில் இந்த இடத்தில் மார்க்ககல்விக்கான மதரஸா அமைய வேண்டும் என்ற கனவோடு 1906-ம் ஆண்டு வஃக்ப் செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் இந்த மஹானின் கனவு 110 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது.